தென்னிந்திய வரலாற்றை அறிந்து கொள்வதற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பவை கல்வெட்டுகளே. பண்டைய தமிழ்நாட்டின் அரசியல், சமூகம், பண்பாடு ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கு இக்கல்வெட்டுகளே துணை புரிகின்றன. வரலாற்றின் பல்வேறு காலக் கட்டங்களின் நிலையைக் காட்டும் காலத்தின் கண்ணாடிகளாக இவை துணை புரிகின்றன. ஒரு வீட்டிற்கு எப்படி வாசல்படி முதன்மையோ அது போல மலைப்பகுதி ஊர்களில் தலைவாசல் கல் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மலைப் பகுதி ஊரிலும் நான்கு தலைவாசல் கல்கள் உள்ளன. ஒன்று நுழைவு வாயிலாகவும் மற்றொன்று இறப்பு போன்ற நிகழ்வுகள் நடந்தால்…