மேற்குமலைத்தொடர்ச்சியில் காட்டெருமையின் நச்சு உண்ணிக்கடியால் பாதிக்கப்படும் மலைவாழ்மக்கள் மேற்குமலைத்தொடர்ச்சி அமைந்துள்ள தேனி, திண்டுக்கல் பகுதிகளில் நச்சு உண்ணிக்கடியால் மலைவாழ் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கடும் அல்லல்படுகின்றனர். இவற்றைத்தவிர அண்டை மாநிலமான கேரளா, ஆந்திராவிலும் இதே நிலை நீடிக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் ஏறக்குறைய 2 கோடி மலைவாழ் மக்கள் வசித்துவருகின்றனர். இம்மலைவாழ் மக்கள் அப்பகுதியில் வேளாண் நிலங்களை உருவாக்கி, காழ்ச்செடி(காப்பி), தேயிலை, வாழைக்காய், சீமைஅவரை(பீன்சு), உருளைக்கிழங்கு, செங்கிழங்கு(பீட்ரூட்டு), தோடம்பழம்(ஆரஞ்சு), தேங்கனி (கோகோ), மிளகு, ஏலம், கிராம்பு போன்றவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு…