சாதிச்சான்றிதழுக்காக உரூ.50, 000 கொடுக்க வேண்டிய மலைவேடன் மக்கள்
சாதிச்சான்றிதழுக்காக உரூ.50, 000 கொடுக்க வேண்டிய மலைவேடன் மக்கள் தன் சொந்த நாட்டில் குடியுரிமை, சாதிச்சான்றிதழ் இல்லாமல் அலைக்கழிக்கப்படும் சமூகங்களில் ஒன்று மலைவேடன் சமூகம். இந்தியாவில் சாதியை வைத்தே அரசியல் செய்து கொண்டு வருகிறார்கள். அதே வேளையில் சாதிச்சான்றிதழுக்காகவும் அலைக்கழிக்கப்படுகிறது ஒரு சமூகம். தேனி மாவட்டத்தில் பரசுராமபுரம், மீனாட்சிபுரம் அதன் அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு முதலான பகுதிகளில் மலைவேடன் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள கட்டக்காமன்பட்டி ஊராட்சியில் மலைவேடன் சமூகத்திற்காக ஒரு வகுதியும்(வார்டும்) ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும்…
மலைவேடன் சாதிச்சான்றுக்காக 20 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும் சிற்றூர் மக்கள்
தேவதானப்பட்டி அருகே உள்ள பரசுராமபுரம், மீனாட்சிபுரம் முதலான ஊர்களில் வசிக்கும் மக்கள் சாதிச்சான்றிதழுக்காக 20 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படுகின்றனர். தேவதானப்பட்டி அருகே மீனாட்சிபுரம், பரசுராமபுரம் என இரண்டு சிற்றூர்கள் உள்ளன. இவற்றில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இச்சமூக மக்கள் தங்கள் பரம்பரைத் தொழிலான வேட்டையாடும் தொழிலை விட்டுவிட்டுத் தற்பொழுது வேளாண்மை, கூலி வேலை எனச் செய்துவருகின்றனர். இம் மக்களுக்குச் சான்றிதழ் கடந்த 1984 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் இவர்கள், சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால்…