தேனிமாவட்டத்தில் குற்றஉடைமை(மாஃபியா)க் கும்பல்
தேனிமாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கும் குற்றஉடைமை(மாஃபியா)க் கும்பல் தேனிமாவட்டத்தில் ஏமாற்றும் குற்றக்கும்பல் மறுபடியும் தொழிலில் இறங்கிப் பலரை வஞ்சித்து வருகிறது. தேனி மாவட்டத்தில் மண்ணுளிப் பாம்பு, நாகரத்தினக்கல், குபேரச்செம்பு, கலசம், மயில்படம் போட்ட பத்து உரூபாய்த்தாள், திப்பு சுல்தான் வாள், ஓர் இலட்சம் கொடுத்தால் இரண்டு இலட்சம், கள்ளப்பணம், அரியவகை மூலிகை, கருப்புப் பூனை, கருப்பு மை, கருந்துளசி, இரிடியம்,குபேர பூசை, 500உரூபாய் வண்ணப்படிமை, 1000உரூபாய், பழங்கால நாணயங்கள், பழங்காலத்து தினார்பணத்தாள்கள், களங்கம்(தோசம்) கழிக்கும் பூசை, அகழ்வராய்ச்சியின்போது கிடைத்த மன்னர்காலத் தங்கக் காசுகள்,…