மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 7 – இலக்குவனார் திருவள்ளுவன்
(மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி) அருகிய அயற்சொற்கள் அயல்மொழிச் சொற்களை மிகக் குறைவாகவே கையாண்டுள்ளார். அவ்வாறு அவை இடம் பெற்ற இடங்களிலும் நான்கு இடங்கள் தவிர, அனைத்து இடங்களிலும் கிரந்த எழுத்துகளை நீக்கித் தமிழ்வரிவடிவிலேயே குறிப்பிடுகிறார். செகத்தில் (மாங்கனி : 2. சேரன் அவையில் ..7:7) கோசமிட்டு (மாங்கனி :18. வென்றிகொள் சேரர்தான :1:4) சீவன் (மாங்கனி :38 சாகாத சித்திரங்கள் 9-1) .துட்டனும் (மாங்கனி :15 ஏடீ தலைவி:3.8) என்பன போன்று அயலெழுத்து நீக்கித்…
மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 6 – இலக்குவனார் திருவள்ளுவன்
(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி) தமிழ்த்தேசியம் சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர் முக்குலத்தவர் ஆட்சி செய்த நாடுதான் தமிழ்நாடு. எனினும் இனம் என வரும் பொழுது சேர இனம், சோழ இனம், பாண்டிய இனம் என இல்லாமல் தமிழினமாகத் தழைத்திருந்தனர். எனவேதான், தமிழ்த்தேசியத்தை உணர்த்தத் தமிழகம் எனச் சேர்த்தே புலவர்கள் பாடி உள்ளனர். இதை உணர்த்தும் வகையில், அரசால் மூவர் என்றாலும் இனத்தால் ஒருவரே என உணர்த்தும் வகையில், ” நாம்மூவர் ஆனாலும் ஒரும னத்தார்! நாட்டினில்வே…
மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 5 – இலக்குவனார் திருவள்ளுவன்
(மார்கழி 13, 2045 / திசம்பர் 28,2014 தொடர்ச்சி) ஆரியக் கசப்பு உருவ வழிபாட்டிற்கு எதிராகவும் தேவர்கள் என ஆரியர்கள் தம்மைக்கூறி இடைத்தரகராய் இறை வழிபாட்டில் நடந்து கொண்டு தமிழர்களை ஏமாற்றுவதற்கு எதிராகவும் ஓர்இறைக் கொள்கையுடன் தன்மான எண்ணம் கொண்டவர் அக்காலக் கவிஞர் கண்ணதாசன். எனவே, தேரில்லை சிலையில்லை தேங்கா யில்லை தெய்வத்தைச் செவிடாக்கும் தேவரில்லை (மாங்கனி : 1.வஞ்சியில் விழா 7 :1-2) என அருமையாக ஆரியக் குறுக்கீடற்ற வழிபாட்டை விளக்குகிறார். ‘மாங்கனி’யில் இடம் பெறும் தொடர்கள், பின்னர், கவிஞர்…
மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன்பகுதி 4 – இலக்குவனார் திருவள்ளுவன்
(மார்கழி 6, 2045 / திசம்பர் 21,2014 தொடர்ச்சி) மனத்திலமர்ந்த மாங்கனி நாட்டிய நங்கை மாங்கனியைச் சேரன் அவையில் நுழைவதைக் கூறி அறிமுகப்படுத்துகிறார். அப்பொழுது அனைவர் சிந்தையிலும் அவளே நிறைந்துள்ளாள் என்பதை, மின்வெட்டுக் கண்கட்ட மேவி னாற்போல் மென்பட்டுப் பூங்குழலி பூமி தொட்டுப் பொன்கட்டிச் சிலைபோல ஊர்ந்து வந்தாள்; புத்தியெல்லாம் அவளானார் அவையி ருந்தோர்! (மாங்கனி : 2. சேரன் அவையில் .. 4: 1-4) என விளக்குகிறார். பெண்கள் தங்கள் பார்வையால் ஆண்களைத் தாக்கி வீழ்த்துவதால் அவர்களின் கூரிய விழிகளை வேல்விழி…
மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கார்த்திகை 28, 2045 / 14 திசம்பர் 2014 தொடர்ச்சி) அரிமா அடலேறு சேர வேந்தனின் அமைச்சன் அழும்பில்வேள். அவனது மகன் அடலேறு, மாங்கனியைப் பார்த்தது முதல் பித்தனாகிவிட்டான். அவன் விழியிருக்கும் ஒளியின்றி, விரிந்த நெஞ்சு வெளியிருக்கும் நினைவின்றி, வாய்வடித்து மொழிபிறக்கும் தொடர்பின்றிக்காதல் ஒன்றே மூண்டிருக்கும் உருவானான் எனக்காதலர் நிலையை விளக்குபவர், காதற்சுமையை இறக்கி வைக்க வழியில்லையே என எண்ணுகிறார். சுமைதாங்கி, சுமைக்கல், சுமைதாங்கிக் கல் என்ற பெயர்களில் தலைச்சுமையை இறக்கி வைக்க வழி உள்ளது அல்லவா? அதுபோல் காதலால் ஏற்படும்…
மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கார்த்திகை 21, 2045 திசம்பர் 7, 2014 இதழின் தொடர்ச்சி) முதல் காப்பியம் இத்தகைய மாறுபட்ட எண்ண ஓட்டங்களிடையே கல்லூரிக்கால விடுமுறையில் நூலகத்தில் படித்த ‘மாங்கனி’ எப்பொழுதும் நினைவில் மணக்கிறது; கருத்தில் சுவைக்கிறது. அதனைப்பற்றிய எண்ணத்தைப் பகிர விரும்புகின்றேன். கண்ணதாசன்எழுத்துலகில் இடம் பெற்ற 10 ஆண்டுகள் கழித்து எழுதிய இலக்கியமான ‘மாங்கனி’யே அவரது முதல் காப்பியம். 1954இல் கல்லக்குடி வழக்கில் சிறைத்தண்டனை பெற்று திருச்சிராப்பள்ளி மத்தியச் சிறையில் இருந்த பொழுது உருவானது இக்காப்பியம். தம் காவிய ஆசையைத் தீர்க்கும் வகையில் நாளொன்றுக்கு ஒரு…
மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
கண்ணதாசன் என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது அவரது திரைப்பாடல்கள்தாம். நம் வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளின் பொழுது நம்மோடு தொடர்புடையனவாக – நமக்கே என்று எழுதப்பட்டனவாக – அமைந்த பாடல்கள் வழி நாம் அவரை என்றும் நினைவில் கொள்கிறோம். ஆனால் அவர் பாடலாசிரியராக மாறும் முன்னரும் பின்னருமே கவிஞர், கதையாசிரியர், நாடக ஆசிரியர். இதழாசிரியர், திரைப்படக் கதைஉரையாடலாசிரியர், புதின எழுத்தாளர், காவிய ஆசிரியர், கட்டுரையாளர், எனப் பன்முகமும் கொண்டவர். பிறப்பும் சிறப்பும் கண்ணதாசன் ஆனி 10, 1958 / 24.6.1927 இல் சிறுகூடல்பட்டியில்சாத்தப்பன்-விசாலாட்சி…