வெடி வெடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர் ஊராட்சிமன்றத்தில் தீர்மானம் தேனிமாவட்டத்தில் உள்ள முதலக்கம்பட்டி ஊராட்சியில் வெடி(பட்டாசு) வெடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர் எனத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. முதலக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வைகைப்புதூர், முதலக்கம்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, இந்திரா குடியிருப்பு போன்ற பகுதிகளில் திருமண விழாக்கள், புதுமனை புகுவிழா, காதணிவிழா, பூப்புனித நீராட்டு விழா, துக்க நிகழ்ச்சி, கிடாவெட்டு போன்ற நிகழ்ச்சிகளுக்குக் காதைப் பிளக்கும் வண்ணம் வெடிகள் வெடிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைவதுடன், நோயாளிகளும், முதியோர்களும் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் வெடிகளினால் ஏற்படும் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்குக் கூடுதலாக பணியாளர்களை நியமிக்க…