தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 2. மாணவரும் தமிழும்
(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார் , 1. தமிழ்க்கலை – தொடர்ச்சி) 2. மாணவரும் தமிழும் (15-10-51 அன்று பச்சையப்பன் கல்லூரித் தமிழ் மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு) தமிழ்த் தோழர்களே! இன்று இங்கே தமிழ் மன்றத்துவக்க விழாவுக்குத் தலைமை வகிக்கும்படி நீங்கள் கட்டளை இட்டிருக்கிறீர்கள். என்னுடைய உடல் எந்த நிலையிலே இருக்கின்றது என்பது உங்களுக்கு நன்கு தெரியும். முனைவர். மு. வரதராசனார் அவர்கள் என்னைப்பற்றிச் சிறப்புரை பகர்ந்தார். யான் அச் சிறப்புரைகளுக்கு அருகன் அல்லன். என்னுடைய கண்கள் படலத்தால் மறைக்கப் பட்டிருக்கின்றன….