மாணவத் தோழர்களே! இளம் போத்துகளே! – வே.ஆனைமுத்து
மாணவத் தோழர்களே! இளம் போத்துகளே! தமிழைக் காப்போம் வாருங்கள்! தமிழால் வாழ்வோம் வாருங்கள்! அன்பார்ந்த மாணவத் தோழர்களே! கட்டிளங் காளைகளே! இளம்போத்துகளே! 18 அகவைக்கு மேல் 35 அகவை வரை உள்ள ஆடவரும் மகளிருமே மக்கள் தொகையில் அதிகம் பேர், எப்போதும் இந்த விழுக்காடு அதிகம் மாறுவது இல்லை. தமிழ்நாட்டு மக்கள் தொகை 7.5 கோடி. இவர்களில் தமிழ் பேசுபவர்களே அதிகம் பேர். தெலுங்கையும், மலையாளத்தையும். உருதுவையும், இந்தி, மார்வாரியையும் பேசுவோர் எல்லோரும் 7, 8 விழுக்காட்டினர் இருக்கக்கூடும். தமிழ்மொழியில் கடலளவு பழந்தமிழ் இலக்கியங்கள் உண்டு. அவை பெரிதும் பாடல்கள்….
மனநிலை பாதிக்கப்படும் மாணவர்கள்
மனநிலை பாதிக்கப்படும் மாணவர்கள் தேவதானப்பட்டிப் பகுதியில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளினால் மாணவர்கள் மனநிலை பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டிப் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இயங்கும்; அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கவேண்டும் என்றும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களைக் கசக்கிப்பிழிகின்றனர். இவ்வாறு தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களைக் கசக்கிப்பிழிவதன் மூலம் மாநில அளவில் மதிப்பெண் எடுப்பதோடு தங்கள் பள்ளியில் அதிகமான மாணவர்கள் சேருவார்கள் என்று…
புதுச்சேரி, மாணவர் பொதுநலத் தொண்டியக்கம்
67 ஆவது திங்கள் பாவரங்கம் திருக்குறள் பெருமாள் ஐயா நூற்றாண்டு தொடக்க விழா 15-11-1914 – 15-11-2014 ஆகியன 30.12.2013 அன்று நடைபெற்றன. நிகழ்ச்சியில் மரபுப் பா, கழக இலக்கிய அறிமுகம், புதுப் பா, மொழிபெயர்ப்புப் பா , துளிப்பா, சிறார் பாவரங்கம் நடைபெற்றன. – புதுவைத் தமிழ்நெஞ்சன்