மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வா.இ.க. / எல்.ஐ.சி. விருது வழங்கும் விழா
தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வாணாள் இடரீட்டுக் கழகம்(எல் .ஐ.சி.) சார்பில் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை வா.இ.க./எல்.ஐ.சி.கிளை மேலாளர் மோகன சுந்தரம் மாணவர்களுக்கு விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி இடரீட்டுக் கழகம் .வைரவிழா கொண்டாடுவதைக் குறித்து சிறப்புரையாற்றினார். கிளையின் வளர்ச்சி அதிகாரி தமிழரசு முன்னிலை வகித்தார். இந்திய வாணாள் இடரீட்டு நிறுவனம் தொடர்பாக இராசி என்ற மாணவியும், அதன்…
மாணிக்கவாசகம் மாணவி பரமேசுவரி தினமலர் பட்ட அவைக்குத்தேர்வு
தினமலர் பட்டம் – பட்ட அவை உறுப்பினராகத் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி பரமேசுவரி தேர்வு “அரசும் ,அரசியல் கட்சிகளும் மாணவர்களுக்கு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன ?” என எழுதி அனுப்புங்கள் என்று தினமலர் பட்டம் இதழில் சில நாட்களுக்கு முன்பு மாணவர்களிடம் கேட்டு இருந்தனர். அதன் தொடர்ச்சியாக இப் பள்ளியில் இருந்து பல்வேறு மாணவர்களை ஊக்கப்படுத்தி இப்போட்டியில் கலந்து கொள்ளச் சொன்னோம். அதனில் சிவகங்கை மாவட்ட அளவில் அரசு,அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி…
மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் மந்திரமா? தந்திரமா ?
கண்ணாடியைத் தின்னும் வித்தை எப்படி ? மந்திரமா? தந்திரமா ? அறிவியல் நிகழ்ச்சியில் சுவையான நிகழ்வுகள்! காதில் குளிர்பானம் குடிப்பது எப்படி? அறிவியல் உண்மை விளக்கம் தேவகோட்டை – தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ‘அறிவியல் அறிவோம் நிகழ்ச்சி!’ வாயிலாகப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் வித்தைக்காட்சியும், அதன் தந்திரங்களும் சொல்லப்பட்டன. நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் வரவேற்றார். தேவகோட்டை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இலெட்சுமி தேவி தலைமை தாங்கினார் சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர்…
மாணிக்கவாசகம் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கலந்தாய்வுக் கூட்டம்
பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கலந்தாய்வுக் கூட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்தோரை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். இறைவணக்கமாக அபிராமி அந்தாதி மாணவிகளால் பாடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சிக்குத் தலைமை தங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சார்ந்த தாமோதரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அறிவியல்…