மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி : திருமுருகாற்றுப்படை ஒப்பித்தல் போட்டி : மாணவர்களுக்குப் பாராட்டு
மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி : திருமுருகாற்றுப்படை ஒப்பித்தல் போட்டி : மாணவர்களுக்குப் பாராட்டு தேவகோட்டை: சௌபாக்கிய துருக்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற திருமுருகாற்றுப்படை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை வாசுகி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பரிசு பெற்ற மாணவர்களான திவ்விய பாரதி, அசய், பிரசித்து, கனிட்கா, முத்தையன், திவ்வியசிரீ, சத்தியா, அம்முசிரீ.மகாலெட்சுமி, அசய் பிரகாசு, பாக்கியலெட்சுமி, நந்தகுமார், இராசேசு, உமா மகேசுவரி,…
சிறுவர்கள் செய்தார்கள்! வென்றார்கள்!
செய்தார்கள்! வென்றார்கள்! சுட்டி விகடன் கவின்கலைச் சான்றிதழ்களைப் பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் வழங்கிப் பாராட்டுதல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுட்டி விகடன் சார்பாக 2015- திசம்பர் மாதம் நடைபெற்ற கவின்கலை(FA) செயல் திட்டப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்குச் சுட்டி விகடனின் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டு விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுட்டி விகடன் நடத்திய…
மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பொது மருத்துவ முகாம்
காப்புறுதிக்கழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான பொது மருத்துவ முகாம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்தியக் காப்புறுதிக்கழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான திங்கள் பொது மருத்துவ முகாம் நடை பெற்றது. முகாமிற்கு வந்திருந்தோரை பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ . சொக்கலிங்கம் வரவேற்றார். காப்புறுதிக்கழகத்தின் கிளை மேலாளர் மோகன சுந்தரம் தலைமை தாங்கினார். காப்புறுதிக்கழகத்தின் வளர்ச்சி அதிகாரிகள் தமிழரசு ,பெரியசாமி முன்னிலை வகித்தனர்.மருத்துவர் ஏழுமலை பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் ஆய்வுசெய்தனர். மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களைக் கண்டுபிடித்து அவற்றை…
தாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள்- சுபாசினி திரெம்மல் உரை
செருமனியில் அனைத்துப் பள்ளிகளும் அரசு பள்ளிகளே! தங்க நகையே அணியாத நாடு செருமன்! வாழ்க்கையில் கல்விதான் நண்பன்! “வாழ்க்கை முழுவதும் கல்விதான் சிறந்த நண்பனாக இருக்கும்” எனச் செருமனியிலிருந்து வந்திருந்த பெண் ஆராய்ச்சியாளர் சுபாசினி திரெம்மல் பேசினார். தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் வாழ்வியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். விழாவில் செருமனி தமிழ் மரபு அறக் கட்டளைச் செயலரும், கல்வெட்டு…
இசை நாட்டியத்துடன் திருக்குறள் கற்பிப்பு
பள்ளி மாணவர்களுக்கு நடனமாடி இசையோடு திருக்குறளைக் கற்றுக் கொடுப்போம்! நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உறுதி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர்(சேர்மன்) மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இசையோடு சூத்திரத்தின் மூலமாக திருக்குறளை நடனத்துடன் சொல்லிக் கொடுக்கும் செயல் வழி கற்பித்தல் பயிற்சி முத்தமிழ் குறள் நிகழ்வாக நடைபெற்றது. பயிற்சிக்கு வந்திருந்தோரை மாணவி பரமேசுவரி வரவேற்றார். பள்ளித் தலைமையாசிரியர் இலெ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை-அறிவியல் கல்லுரி முதல்வர் சந்திரமோகன் தலைமை தாங்கிப் பேசுகையில், என் அன்னை தொடக்கப்பள்ளி…