மாண்பிலா மடமை ஆக்குநூல் மனுநூல் ! – பழ.தமிழாளன்
மாண்பிலா மடமை ஆக்குநூல் மனுநூல் ! 1. நெற்றியிலே பெண்குறியும் நிலைபெற்ற(து) உண்டோ ? நெற்றிதனில் பிறந்தவராம் பிராமணர்கள் என்பார் உற்றதொரு பெண்குறியும் தோளதனில் உண்டோ ? உலகாள்வோர் பிறந்தகுறி அக்குறியே என்பார் பெற்றதொடை பெண்குறியும் பிறங்குவதும் உண்டோ ? பொருள்வணிகர் தோன்றுகுறி அதுதானாம் என்பார்.// நிற்கின்ற தாளதனில் பெண்குறியும் உண்டோ ? நிறையுழைப்புச் சூத்திரர்கள் பிறந்த குறி என்பார் ! 2. பிறக்குமிடப் பெண்குறிகள் பிறந்தவிடம் நான்காய் பேதமையை விளைவிக்கும் மனுநூலின் கூற்றை அறவுணர்வு பெற்றிருக்கும் …