மாதிரிப் பள்ளிகள் தமிழ்வழிப் பள்ளிகளாக அமையட்டும்!,இலக்குவனார் திருவள்ளுவன்
சிறப்புக் கட்டுரை: மாதிரிப் பள்ளிகள் தமிழ்வழிப் பள்ளிகளாக அமையட்டும்! மின்னம்பலம் மாதிரிப் பள்ளிகள் அமைக்க இருப்பது குறித்து அண்மையில் தமிழக முதல்வர் மு.க.தாலின் புதுதில்லியில் பேசியுள்ளார். புது தில்லி அரசின் மாதிரிப் பள்ளிகளையும் தமிழக முதல்வர் பார்வையிட்டுள்ளார். மத்திய அரசின் பள்ளிகள்போலும் நவோதயா பள்ளிகள் போலும் மாவட்டந்தோறும் சிறப்பான முன்முறைப்பள்ளிகளை நன்முறையில் அமைக்க வேண்டும் என நாம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். எனவே, முதல்வரின் இப்பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது. “தமிழ்நாட்டுக் கல்வியகங்களில் இப்போதைய முறையிலான அயல்மொழிக்கல்வி முறை நிறுத்தப்பட வேண்டும். 6 ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம்…