மாத்தளை இந்து தேசியக் கல்லூரியில் கணிணிப் பிரிவுத் தொடக்கம்

                           கணிணிப் பிரிவுத் தொடக்கம்     மாத்தளை இந்து தேசியக் கல்லூரியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட கணிணிப் பிரிவினைக் கல்விஅமைச்சர்  வே. இராதாகிருட்டிணன்  திறந்து வைத்தார். இவருடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிவஞானம் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] பா. திருஞானம் – 0777375053 thirunewsfirst@gmail.com

மாத்தளை பாக்கியம் தேசியக்கல்லூரியின் வணிக விழா

வணிக விழாவும் மாணவர்கள் சிறப்பிப்பும்   மாத்தளை பாக்கியம் தேசியக் கல்லூரியின்  வணிக விழாவும் பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்வும் மாத்தளையில் நடைபெற்றது. இதற்குச் சிறப்பு விருந்தினராகக் கல்வி அமைச்சர் வே. இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார்.   இதன் போது  வணிகமன்றத்தின் கலை நிகழ்வும் இடம் பெற்றது. இச் நிகழ்விற்குக் கல்வி அதிகாரிகள், மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய அறங்காவலர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் முதலிய பெரும் திரளான மாணவிகள் கலந்து கொண்டார்கள். பா.திருஞானம் – 0777375053