மாநில வளைகோல் போட்டி : திருநகர் அணி வெற்றி
மதுரை திருநகர் வளைகோல் மன்றம் சார்பில் வளைகோல் வீரர்கள் பாலசுப்பிரமணியன், செயசிங், பழனியாண்டவர் மெய்யப்பன் ஆகியோர்களது நினைவுச் சுழற் கோப்பைக்கான 15– ஆம் ஆண்டு மாநில அளவிலான வளைகோல் போட்டி பிப்ரவரி 5 அன்று காலையில் தொடங்கி நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள முதன்மை நகரங்களைச் சேர்ந்த 22 அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி உற்சாகமாக விளையாடின. முதல் நாளன்று காலையில் வாடிப்பட்டி ‘எவர்கிரேட்’ வளைகோல் மன்ற அணியும், இராசபாளையம் பெடட் பிரன்சு அணியும் களத்தில் இறங்கி மோதின. அதில் வாடிப்பட்டி எவர்…