மாணிக்கவாசகம் பள்ளியில்விருது பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா
மாணிக்கவாசகம் பள்ளியில் விருது பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா தேவகோட்டை – தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விருது பெற்ற பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு வந்தவர்களை மாணவர் செகதீசு வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை த.மு.எ.ச.கலை இலக்கிய இரவு விழாவில் மாநில அளவில் பரிசுகளை வென்ற இப்பள்ளி மாணவிகள் தனலெட்சுமி, பரமேசுவரி, காவியா ஆகியோருக்கு விருதுகளும், புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டன. …