முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே! -பேரா.சி.இலக்குவனார்
உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே என்பதும், முதல் மாந்தரால் உரையாடப்பெற்ற மொழி தமிழே என்பதும் உண்மையோடுபட்ட செய்திகளே யாயினும் இன்னும் யாவராலும் ஒப்புக்கொள்ளப்படவில்லை. தமிழர்கள் இந்நாட்டில் தோன்றியவரே என்பதும் ஆரியர் வருகைக்கு முன்னர் இந்நாட்டில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே என்பதும் நிலைநாட்டப்பெற்றுவிட்டன. பேராசிரியர் சி.இலக்குவனார் பழந்தமிழ்: பக்கம் 42