திருக்குறள் அறுசொல் உரை – 97.மானம்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 96. குடிமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 13. குடி இயல் 97. மானம் வாழ்விலும், தாழ்விலும், தம்மதிப்பை, மானத்தைத் தாழவிடாது காத்தல் இன்றி யமையாச் சிறப்பின ஆயினும், குன்ற வருப விடல். தேவையானவை என்றாலும், மானம் கெடவரின், ஏற்காது கைவிடு. சீரினும், சீர்அல்ல செய்யாரே, சீரொடு பேர்ஆண்மை வேண்டு பவர். ஆளுமையை வேண்டுவார், புகழுக்காக மானக்கேட்டை என்றும் செய்யார். பெருக்கத்து வேண்டும்,…