மானுடப்பேரவல நினைவேந்தல் – அ.ஈழம் சேகுவேரா
காலப்பெருந்துயர் பகிர்வும், மானுடப்பேரவல நினைவேந்தல் அறிக்கையிடலும், ஈழத்தின் இதயப்பண் போராளிக்கலைஞன் மாநாயகர்(மேசர்) சிட்டு அவர்களின் குரலில், ‘நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது, அந்த நிலவும் வானில் இரவு நேரம் அழுதது. நத்திக்கடல் மௌனமாகக்கரைந்தது. வங்கக்கடல் கோபமாக இரைந்தது…’ என்று ஒலிக்கும் முல்லைத்தீவு வெற்றிச்சமர் நாயகர்களின் நினைவேந்தல் பாடல் காற்றைக்கிழித்து இசைக்க ஆரம்பித்ததும், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு முதன்மைச் சாலையில் பயணித்தவர்கள் அனைவரும் தமது போக்குவரத்து ஊர்திகளை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, ‘விடுதலை’ எனும் மாபெரும் மரத்திற்காகத் தமது உடல்களை இலட்சிய…