காமராசர் பிறந்தநாள் கவிதைப்போட்டி
மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் நடைபெறவுள்ள காமராசர் பிறந்த நாள் விழா கவிதைப் போட்டிக்கு, போட்டியாளர்கள் தங்களது கவிதைப் படைப்புகளை சூன் 30 ஆம் நாளுக்குள் அனுப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாமதுரைக் கவிஞர் பேரவைத் தலைவர் சி. வீரபாண்டியத் தென்னவன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கருமவீரர் காமராசர் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், பேரவை சார்பில் கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது. இதில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம். “எழுத்தெல்லாம் தூய தமிழ் எழுத்தாகுமா?” என்ற தலைப்பில், மரபு மற்றும் புதுக்கவிதைகள்…