மாம்பூவில் நோய் தாக்குதல்- உழவர்கள் கவலை
இந்தியாவின் தேசியப் பழமான மாம்பழம் தன்னுடைய மணத்தாலும் சுவையாலும் நம்மை மயக்க வல்லது. மாம்பழ உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் இந்தியா கிட்டத்தட்ட உலக உற்பத்தியில் பாதியை நிறைவு செய்கிறது. சேலத்திற்கு அடுத்தபடியாகப் பெரியகுளம், போடி, தேவதானப்பட்டி பகுதியில் பல காணி பரப்பளவில் மாம்பழங்கள் பயிரிட்டு வருகின்றனர். மாங்காயிலிருந்து வடு, மாங்காய் வற்றல், மாம்பழம் எனப் பலவகை கிடைக்கிறது. தற்பொழுது பெய்த மழையால் மாந்தளிரில் பலவகையான பூச்சிகள் தாக்கியுள்ளன. தத்துப்பூச்சிகள், மாங்கொட்டைக் கூண்வண்டு, அசுவினி, செதில் பூச்சி, பூங்கொத்துப்…
தேவதானப்பட்டி பகுதியில் மாம்பூப் பருவம் தொடங்கியது
தேவதானப்பட்டி பகுதியில் மாமரத்தில் மாம்பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, கெங்குவார்பட்டி, முருகமலை, கல்லுப்பட்டி பகுதிகளில் பல காணி பரப்பளவில் மாந்தோப்புகள் உள்ளன. செந்தூரம், காசா, கல்லாமாங்காய், பங்கனப்பள்ளி, கழுதைவிட்டை முதலான பலவகை மாம்பழவகைகள் உள்ளன. இப்பகுதியில் விளையும் மாம்பழங்கள் தமிழகத்தின் பிறமாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளா, கருநாடகா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் தற்பொழுது வெளிமாநிலங்களைச்சேர்ந்தவர்கள் மாந்தோப்புகளைப் பார்வையிட்டு முன்கூட்டியே பணத்தை கொடுத்து விட்டுச்செல்கின்றனர். கடந்த இரண்டு…