மக்கள்நலக்கூட்டணியின் மாநாட்டு ஒளிப்படங்கள் – பகுதி 2
மதுரையில் தை 12, 2047 / சனவரி 26, 2016 அன்று நடைபெற்ற மக்கள்நலக்கூட்டணியின் மாநாட்டு ஒளிப்படங்கள் (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மக்கள்நலக்கூட்டணியின் மதுரை மாநாட்டுப் படங்கள் – முதல் பகுதி அரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு!
வைகோ சொல்பவர் நீங்கள்தாமா? தடம் புரளலாமா?
வைகோ சொல்பவர் நீங்கள்தாமா? தடம் புரளலாமா? தலைக்குனிவிற்கு ஆளாகலாமா? தமிழ்நாட்டில் மாறி,மாறி இரு கட்சிகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவும் இரு கட்சிகளுடனும் மாறி மாறிக் கூட்டணி வைத்து, வெறுப்படைந்ததாலும் வைகோ முதலானவர்கள் புதிய கூட்டணியை உருவாக்க எண்ணுவது தவறல்ல! ஆனால், கூட்டணியின் பொதுவான கொள்கைகளுக்காகத் தனக்கே உரிய கொள்கைகளை விட்டுக் கொடுப்பது முறையல்லவே! வைகோ பொதுவான கருத்தொற்றுமைக்காகத் தமிழ்ஈழம் பற்றியும் கூடங்குளம் பற்றியும்பேசப்போவதில்லை என்கிறார். நாளை இவர் ஆட்சி அமைத்தால், கருத்தொற்றுமைக்காக எந்தக் கொள்கையையும் விட்டுக் கொடுப்பார் என்றுதானே பொருள். தமிழ்ஈழத்திற்காகக் குரல்…