பாராளுமன்றில் அறிஞர் அண்ணா – இந்து ஆங்கில நாளிதழ்

  பாராளுமன்றில் அறிஞர் அண்ணா   திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரும்பெருந் தலைவரான அறிஞர் அண்ணா அவர்கள் தமது பாராளுமன்ற முதற் சொற்பொழிவை வெறுப்பிற்கும், பகைமைக்கும், சினத்திற்கும் நடுவண் நிகழ்த்தினார்கள். அன்னார் முதற்பேச்சு இந்திய மேலவையின் வரலாற்றிலேயே ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். தமிழ்ப் பெருங்குடி மக்களால் ‘அண்ணா’ என்று அழைக்கப்படுகின்ற அரிய தலைவர் இவர். பிரிவினையாளர், இந்தித் திணிப்பின் இணையற்ற எதிர்ப்பாளர், சிறந்த சொற்பொழிவாளர் என்னும் புகழோடு இந்திய மேலவைக்கு வந்தார்.   அறிஞர் ஆங்கிலத்தில் நிகழ்த்திய முதற் பேச்சு ‘சொற்பெருமழை’ என்று பாராளுமன்ற…

தலைவர் நேசமணி மணிமண்டபத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்

தமிழர்களின் குமுகாய, பண்பாட்டு விடுதலைக்காகவும், தமிழகத்தின் தென் எல்லையாக கன்னியாகுமரியைத்  தாய்த்தமிழகத்துடன்  நிலைத்து வைத்துக் கொள்வதற்காகவும் போராட்டங்கள் நடத்தி  ஈகம் செய்தவர் நேசமணி. இதனால் இவர்  தலைவர்(மார்சல்) நேசமணி என்றும், குமரித்தந்தை என்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இப்பெருந்தகையாளரின் நினைவைப் போற்றும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 48இலட்சத்து 70 ஆயிரம் உரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலைவர் நேசமணி மணிமண்டபத்தினை, முதலமைச்சர் செல்வி செயலலிதா காணொலிக் காட்சி மூலமாக  மாசி 15, தி.பி.2045/ பிப்.27, 2014 அன்று திறந்து வைத்தார். நாகர்கோவில்…