எழுத்தைச் சிதைப்போர் எச்சிலுக்(கு)ஒப்பு தமிழடிமை நீக்கார் தமிழ்த்திருத்தம் செய்வர்   உமிழ்கின்ற எச்சிலுக்(கு)ஒப்பு. எழுத்துத் திருத்தம் இனிமேலும் செய்தால்   கழுத்து முறிந்துவிடும் காண். குறிக்கோள்கள் இல்லாமல் நம்எழுத்தை மாற்றும்   அறிவில்லார் செய்கொடுமை ஆய். அடியோடு மாற்றி அருந்தமிழை வீழ்த்தும்    தடியாரைத் தாங்கிடுதல் தப்பு. அழிப்பார் சுழிப்பார் அடிப்பார் கெடுப்பார்    பழிப்பார் தமிழின் பகை. எழுத்துத் திருத்தத்தை எந்நாளும் ஏலோம்   முழுத்தமிழ் கொல்வாரை மொத்து கன்னடத்தில் சொல்லிவிட்டால் கால்முறிப்பார் நல்எழுத்தை   என்னிடம் திருத்துகிறாய் இங்கு.? இதுவரை போதும்…