ஊனத்தை அடையாளம் ஆக்காதே! – அன்பு
“தம்பி, எழுந்திரம்மா கண்ணா! நேரம் ஆகுதல்லவா?” “கொஞ்சம் பொறுங்கள் அம்மா!” “என்னப்பா இது! பாட்டுப்போட்டிக்குப்போக வேண்டுமல்லவா? அப்பாவும் நானும், முன்பே எழுந்து குளித்துப் புறப்பட்டு உன்னுடன் சாப்பிடலாம் எனக் காத்துக் கொண்டிருக்கிறோம்!. நீ, இன்னும் எழுந்திருக்காமல் இருக்கிறாயே!” “இல்லையம்மா! எனக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது. போட்டிக்கு எதற்குப் போகவேண்டும்?” (அப்பா, வந்துகொண்டே) “சுடர், வழக்கமாக இந்நேரம் குளித்து முடித்து இருப்பாய்! போட்டிக்குப் போக வேண்டிய நேரத்தில் ஏன் படுத்துக் கொண்டு உள்ளாய்! எழுந்திரு! எழுந்திரு! எரிச்சல் பறந்துவிடும்!” “நான்,போட்டிக்கு வரவில்லையப்பா!” “என்ன வரவில்லையா? நீதானே…