தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கிக் கொடுமைப்படுத்தும் இலங்கைப் படையினர்!
தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கிக் கொடுமைப்படுத்தும் இலங்கைப் படையினர்! – உறுதிப்படுத்தும் பன்னாட்டு அமைப்பு! இலங்கையின் சிங்களப் படையினர் தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தி ‘உண்மை மற்றும் நீதிக்கான பன்னாட்டு அமைப்பு’ தெரிவித்துள்ளது. இலங்கைப் போரின்பொழுதும் அதன் பின்பும் தமிழ்ப் பெண்களைக் கைது செய்து, தடுத்து வைத்துப் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தியதாகவும் அவர்களிடம் மேலும் பாலியல் குற்றங்கள் பலவற்றில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்படும் இலங்கைப் படை அலுவலர்கள் ஆறு பேரின் விவரங்களைப் பன்னாட்டு மனித உரிமை அமைப்பொன்று ஐக்கிய…
செயலலிதா வழியில் பணியாற்றுவேன்! – சசிகலா
செயலலிதா வழியில் பணியாற்றுவேன்! – பொதுச்செயலர் பொறுப்பேற்று சசிகலா பேச்சு அ.தி.மு.க. பொதுச் செயலாளராகச் சசிகலா ( மார்கழி 16, 2047 / திசம்பர் 31, 2016 அன்று) பொறுப்பு ஏற்றார். இராயப்பேட்டை தலைமைக் கழகத்தில் எம்ஞ்சியார், செயலலிதா படங்களைத் தொட்டு வணங்கி விட்டுப் பொதுச்செயலாளர் இருக்கையில் அமர்ந்த அவர் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் நெறியாடல் நடத்தினார். பின்னர் முதல்மாடியில் உள்ள அரங்குக்குச் சென்று அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் மத்தியில் பேசினார். ‘‘தலைமைக் கழகப் பொறுப்பாளர்களே, அமைச்சர் பெருமக்களே, மாவட்டக் கழகச் செயலாளர்களே,…
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் திடீர் மரணம்
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் திடீர் மரணம் தமிழ்த் திரைவானில் புகழ்மிகுப்பாடலாசிரியராக ஒளிவிட்டவர் கவிஞர் நா.முத்துக்குமார்(அகவை 41), மஞ்சள்காமாலையால் தாக்குண்டு பண்டுவம் பயனளிக்காமல் இன்று காலமானார். இவர், காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975-ஆம் ஆண்டு பிறந்தார். இயக்குநராகப் பணியாற்ற விரும்பிய நா.முத்துக்குமார் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். சீமான் இயக்கத்தில் வெளிவந்த ‘வீரநடை’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். அதன்பிறகு, பாடல்கள் எழுவதில் ஆர்வம் ஏற்பட்டு, இதுவரை 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு, முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்….
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சாலிக்குத் தென்கிழக்காசிய இலக்கிய விருது
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சாலிக்குத் தென்கிழக்காசிய இலக்கிய விருது சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளரான சமாலுதீன் முகமது சாலி [(Jamaludeen Mohamed Sali /ச.மு.சாலி/ J.M.Sali) (76 : பங்குனி 28, தி.பி. 1970 ஏப்பிரல் 10, 1939)], இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க தென்கிழக்கு ஆசியாவின் இலக்கிய விருதுக்குத் தேர்வாகியுள்ளார். இதனைத், தேசியப் புத்தக மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இவ்விருது, தெற்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் (ஆசியான்) இடம்பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு…