மாவீரன் பிரபாகரன் மலர்ந்தொளிர்வர் ! – புலவர் பழ.தமிழாளன்
மாவீரன் பிரபாகரன் மலர்ந்தொளிர்வர் ! 1. ஈழமண்ணில் தமிழ்நாடு மலர்ந்து மணம் வீச வீறுமிகு பிரபாகர் தலைமைதனை ஏற்று வாழவினம் உயிர்கொடுத்தோர் வரலாற்றில் நிற்பர் / வையகத்தில் தமிழ்வீரம் வான்கதிரே ஒக்கும் மாழவுமே வைத்தரச பச்சையென்பான் ஈழ மண்ணைவிட்டே மறைந்தொழிவான் மனம்மகிழ மக்கள் வாழவந்த சிங்களத்தை வசைகூறி என்றும் வையகமே தூற்றிநிற்கும் வன்கொலைஞர் என்றே ! 2. கொலைகார அரசபச்சே கொற்றமுமே ஏறின் கொற்றவறம் அன்னவனைக் குப்புறவே வீழ்த்தும் மலையொக்கும் பண்பாட்டில் மலர்ந்து மணம் வீசும் …