மாவீரர் திருநாள்! உண்மையான அஞ்சலி இதுதான்! இ.பு.ஞானப்பிரகாசன்
மாவீரர் திருநாள்! உண்மையான அஞ்சலி இதுதான்! உலகெங்கும் வாழும் தமிழ்மிகு நெஞ்சங்களே! இதோ, மாவீரர் திருநாள்! இன்னுயிர்ச் சொந்தங்களைக் காக்கத் தன்னுயிர் துச்சமென நீத்த காவல் தெய்வங்களின் நாள்! உரிமைப் போருக்காக உயிராயுதம் ஏந்திய ஈகச் செம்மல்களின் நாள்! உலக வல்லரசுகள் எல்லாம் ஒன்று திரண்டு வந்தும் இறுதி வரை களமாடிய மாவீரத் திலகங்களின் நாள்! இப்பேர்ப்பட்ட நாளில் அப்பேர்ப்பட்ட வீரப் பெருமக்களுக்காக நாம் செய்யப் போவது என்ன? வழக்கம் போல் மெழுகுத்திரி ஏற்றியும் பாமாலை போற்றியும், மலர்கள் தூவியும் மேடைகளில் கூவியும்,…