புதைக்கப் புதைக்கவே எழுகின்றோம்! கல்லறைகளைத் தகர்த்து எறிந்தால்.. மண்ணுக்குள் உயிரோடு புதைத்து மண்ணோடு மண்ணாக உக்கி உருக்குலைத்தால்.. மனங்களை விட்டு மறைந்து போகுமா மாவீரம்???? மூடரே! பொறிக்கப்பட்ட உணர்வுகளைப் பொறி கக்கும் தீத் துளிகளாய் நெஞ்சுக்குள் சூல் கொண்டு நிலையாய் வாழ்பவர்க்கு ஏதடா அழிவு? நெஞ்சுக்குள் எரியும் தீயாக, தமிழர் உள்ளத்தில் கனன்றெழும் வேட்கையாக , கந்தக மேனியர் உயிர் கொண்டு வாழ்வதை காடையர் நீர் அறிய மாட்டீர்! புதைக்கப் புதைக்கவே நாம் விதையாய் எழுகின்றோம்!. அழிக்க அழிக்கவே நாம் செழித்தோங்கி வளர்கின்றோம்! தடைகளே தகர்க்கத்…