தோழர் தியாகு எழுதுகிறார் 44: சொல்லடிப்போம் வாங்க! (5)

 (தோழர்தியாகுஎழுதுகிறார் 43 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (5) தாழி அன்பர் பொன்முருகு கவின்முருகு கேட்கிறார்: குற்றாய்வு என்ற சொல் விமர்சனம் என்பதற்கான தமிழ்ச் சொல்லா? ஆமாங்க. விமர்சனம் என்பதில் இரு வகையுண்டு: (1) திறனாய்வு [review] (2) குற்றாய்வு [criticism]. Criticism and self-criticism = குற்றாய்வும் தற்குற்றாய்வும். இன்னுஞ் சிறந்த மாற்று இருப்பின் அன்பர்கள் எழுதலாம். நவ-தாராளவாதமா? புதுத் தாராளியமா? என்ற சிக்கலில் நவ-தாராளவாதம் ஒழிந்து, தாராளியமா? தாராளவியமா? தாராளிகமா? என்ற சிக்கல் மட்டும் தொடர்கிறது. அறிஞர்தம் கருத்துக்காகக் காத்துள்ளேன். இந்தச் சிக்கலை முடித்துக் கொண்டு தாராளியத்தின்…

தோழர் தியாகு எழுதுகிறார் 11: காலநிலை மாற்றம் கற்பிதமன்று

(தோழர் தியாகு எழுதுகிறார் 10: மா இலெனின் விளக்கமும் பேராசிரியர் நெடுஞ்செழியன் நினைவேந்தல் குறிப்பும் தொடர்ச்சி) காலநிலை மாற்றம் கற்பிதமன்று “மெய்ம்மைகளிலிருந்து உண்மைக்கு” என்பார் மா இலெனின். தரவுகளிலிருந்து முடிவுக்கு என்றும் இதைப் புரிந்து கொள்ளலாம். தரவுகள் இல்லாமல் சில முன்-முடிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு பேசுவதால் பயனில்லை. காலநிலை மாற்றம் தொடர்பான தரவுகள்  இல்லாமல் இந்தச் சிக்கலான போராட்டத்தை முன்னெடுக்க இயலாது. எகித்து நாட்டில் இப்போது காலநிலை மாற்றம் தொடர்பான உயர்நிலை மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டை ஒட்டி முதன்மையான சில காலநிலைத் தரவுகள் வெளிவந்துள்ளன. நேற்றைய இந்து (ஆங்கிலம்) நாளேட்டில் தரவு அணி…

தோழர் தியாகு எழுதுகிறார் 10: மா இலெனின் விளக்கமும் பேராசிரியர் நெடுஞ்செழியன் நினைவேந்தல் குறிப்பும்

(தோழர் தியாகு எழுதுகிறார் 9: புவித்தாய்க்குக் காய்ச்சல்! தொடர்ச்சி) மா இலெனின் என்பதில் மா என்பது முன்னெழுத்தா? இல்லை. வி.இ. என்பதுதான் இலெனினின் முன்னெழுத்துகள். விளாதிமிர் இலியிச்சு உல்யானவு இலெனின் என்பது முழுப்பெயர். உல்யானவு குடும்பப் பெயர். இலெனின் என்பது இலேனா ஆற்றின் பெயரால் அவர் சூடிய எழுத்துப் பெயர். மா என்பது மாபெரும் என்பதன் சுருக்கம். மகா அலெக்குசாந்தர், மகா அசோகன் என்பது போல் மகா இலெனின்! மகா என்பதே மா ஆகிறது. தோழர் இலெனின்! புரட்சித் தலைவர் இலெனின்! மாமேதை இலெனின்!…