அதிக மாணவர்கள் ஏற்றிச்செல்வதால் இடர்நேர்ச்சி ஏற்படும் கண்டம்(அபாயம்)
தனியார் பள்ளிப்பேருந்துகளில் அதிக மாணவர்கள் ஏற்றிச்செல்வதால் இடர்நேர்ச்சி ஏற்படும் கண்டம்(அபாயம்) தேவதானப்பட்டிப் பகுதிகளில் தனியார் பள்ளிப்பேருந்துகளில் அளவுக்கதிமாக மாணவர்களை ஏற்றிச்செல்வதால் பேரிடர் நேர்ச்சி ஏற்படும் கண்டம் உள்ளது. தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, வேல்நகர், தண்ணீர்ப்பந்தல் முதலான பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பெரியகுளத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். தனியார்பள்ளிகளில் கும்பகோணம் இடர்நேர்ச்சி ஏற்பட்டபின்பும், சென்னையில் பள்ளியூர்திகள் இடர்நேர்ச்சிகளுக்கான பின்பும் அரசு சார்பில் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அதன் படி அந்தந்த வட்டாரப்போக்குவரத்து ஆய்வாளர்கள் வாகன ஆய்வு மேற்கொண்டு ஊர்திகளைச்…