சான்சன் & சான்சன் உரூ. 493 கோடி இழப்பீடு அளிக்க மிசோரி நீதிமன்றம் தீர்ப்பு!
சான்சன் & சான்சன் (Johnson & Johnson) நிறுவனப் பொருளால் புற்றுநோய் தாக்கிப் பெண் உயிரிழப்பு! உரூ. 493 கோடி இழப்பீடு அளிக்க மிசோரி நீதிமன்றம் தீர்ப்பு! அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் வாழ்ந்த சாக்குலின் பாக்சு (Jacqueline Fox) என்ற பெண் 35 ஆண்டுக் காலமாக சான்சன் சான்சன் நிறுவனத்தின் முகமாவு (Talcum powder) முதலான பொருட்களைப் பயன்படுத்தி வந்துள்ளார். அவர் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கருப்பைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டதுடன் கடந்த ஆண்டு அக்தோபர் மாதம் தனது 62ஆவது அகவையில்…