தேவதானப்பட்டிப் பகுதியில் அடிக்கடி மின்தடை
தேவதானப்பட்டிப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மின்கருவிகள் பழுதாகும் பேரிடர் தேவதானப்பட்டிப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மின்கருவிகள் பழுதாகும் பேரிடர் ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டிப் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. இதில் கடந்த வாரம் முதல் 1 மணிநேரத்திற்கு ஒருமுறை மின்தடை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் அவ்வப்பொழுது இயக்கப்படும் மின்கருவிகள், உழவர்களின் மின்னியந்திரங்கள் அடிக்கடி பழுதாகின்றன. மின்சாரம் நிறுத்தப்பட்டு மீண்டும் மின்சாரம் வரும்பொழுது அதிக மின்அழுத்தத்துடன் வருகிறது. இதனால் தொலைக்காட்சிப் பெட்டிகள், தண்கலன், மின்…