“தமிழரசனின் காலத்தின் குறள் பெரியார்” குறித்து மின்னூர் சீனிவாசன்
குளறுபடி நீங்கக் குறள்படிக்க வாங்க! – மின்னூர் சீனிவாசன் குறள் வெண்பாவின் நடையே – நமக்குக் கொடுக்கும் கருத்துப் படையே! அறமும் புதிதாய்க் கொண்டு – வேல் அரசு உரைத்தார் விண்டு! ஆழ்ந்து படிப்போம் நூலை – நம் அறிவுக் கூர்மை “வேலை” சூழ்ந்த தோழர் எடுப்பார் – மடமைத் தொல்லை தீரத் தடுப்பார்! சாதிச் சழக்கும் இன்றி – மதம் சார்ந்த வழக்கும் இன்றி நீதி மனித நேயம் – தோன்றின் நிகழும் மனத்தில் மாயம்!…
காலத்தின் குறள் பெரியார் நூல் வெளியீட்டு விழா
‘காலத்தின் குறள் பெரியார்’ நூல் வெளியீட்டு விழா மார்கழி 07, 2048 வெள்ளி திசம்பர் 22,2017 மாலை 6.00 தே.ப.ச. (இக்சா) மையம், சென்னை 600008 நூல் வெளியீட்டுச் சிறப்புரை: பேரா.சுப.வீரபாண்டியன் அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும், வணக்கம். தமிழரசன் (எ) வேலரசு ஆகிய நான் கடந்த 24.12.2015 (பெரியார் 42 ஆம் நினைவுநாள்) தொடங்கி 2016 சூன் திங்கள் வரை ‘அய்யாமொழி பொய்யாமொழி’ என்கிற தலைப்பில் குறள் வெண்பா இலக்கணத்தில் 440 புதுக்குறள்கள் என் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வந்தேன். பதிவிட்ட காலத்தில் நல்ல வரவேற்பைப்…
திருத்தமிழ்ப்பாவை – மின்னூர் சீனிவாசன் அணிந்துரை
கவிஞர் வேணு. குணசேகரன் இயற்றிய திருத்தமிழ்ப்பாவை பாசுரப் பாவலரின் வெற்றிப் படைப்பு தமிழ்த்தாய் விழைந்த வண்ணமும் கட்டளைப் படியும் ‘திருத் தமிழ்ப்பாவை’ உருவாக்கப் பட்டதாய் நூலாசிரியர் கவிஞர் வேணு. குணசேகரன் உரைத்து, நேயர் கரங்களில் அதனைத் தவழவிடுகிறார். நாம் பனுவலைப் பயின்றோம், பாசுரங்கள் பொற்புச் சரங்கள், பொற்பூச் சரங்கள் என அமைந்து வியப்பு நல்குகின்றன. சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் முக்கால நோக்குடன் – பண்பாட்டு நிலை, இலக்கியச் சால்பு, வருங்காலக் கனவும் திட்டமும் ஆகிய திறம் அமையப்…
மூச்சே நம் மொழி! – மின்னூர் சீனிவாசன்
குழல்து ளைகளில் மேவும் செம்மொழிகுயில் குரலின் நெடிலிசை கூவும் செம்மொழி! மழலை மொழிக்கிளி பேசும் செம்மொழிமுடி மன்னர் மக்களோ டுயர்ந்த நம்மொழி! தாயாம் இயற்கையே தந்த செம்மொழிஇது தன்னோர் யானைவெண் தந்தச் செம்மொழி! ஓயாக் கடலொலி இழிழாம் எண்ணுவீர்நாம் உணர்ந்து வளர்த்தது தமிழாம் எண்ணுவீர்! முத்தமிழ்க்கலை யறிந்த செம்மொழிசுடர் முத்து அமிழ்கடல் செறிந்த நம்மொழி! வித்தாம் அறிவியல் போற்றும் செம்மொழிபுகழ் விரியும் விசும்புடைக் காற்றும் செம்மொழி! கண்ணோர் திருக்குறள் யாத்த செம்மொழி – சிலம்புக் கலையின் களஞ்சியம் படைத்த செம்மொழி! நண்ணும் மானுட வெற்றிச்செம்மொழி…