செயமங்கலம்: தீப்பற்றி எரியும் மின்மாற்றிகள்
செயமங்கலம் பகுதியில் தீப்பற்றி எரியும் மின்மாற்றிகள் தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் மின்மாற்றி எரிந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் இருந்து வைகை அணை செல்லும் வழியில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி அருகே கயிறு தொழிற்சாலை, கன்னெய்(பெட்ரோல்) நிலையம் உள்ளன. கடந்தவாரம் ஒருநாள் 12 மணியளவில் மளமளவெனத் தீப்பற்றி எரிந்தது. இத்தீயின் புகையைக் கண்டவுடன் கன்னெய் நிலைய ஊழியர்களும், கயிற்றுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களும் அலறியடித்து ஓடிவந்து தீயை அணைக்க முற்பட்டனர். அதன்பின்னர் மின்வாரிய அதிகாரிகளுக்கும், தீயணைப்புத்துறைக்கும் தொலைபேசி வழித் …