திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை – குறளேந்தி ந.சேகர்
திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை உலகம் உய்ய வழிகாட்டியிருக்கும் தெய்வப் புலவர் திருவள்ளுவரது திருக்குறள் உலக வாழ்வியல் நூலாகவும் மனித குலத்திற்கு வழிகாட்டிக் கைந்நூலாகவும் திகழ்ந்து வருகிறது. திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை நம் மனித குலத்திற்கு மிகவும் இன்றியமையாததாக உள்ள கடவுளைப் பற்றி எடுத்த எடுப்பிலேயே வழிகாட்டுகின்றது. இதில் என்ன வியப்பென்றால், திருவள்ளுவர் காலத்தில் பல தெய்வ வழிபாட்டு முறைகள் தோன்றிவிட்டபோதிலும் திருவள்ளுவர் ஒரே கடவுள் கொள்கையை வலியுறுத்தியிருப்பதுதான். முதலதிகாரமான ‘கடவுள் வாழ்த்து’ எனும் இறை வாழ்த்து அதிகாரத்தில் இறைவனது…
அறம் செய விரும்பு! – ஞா.மணிமேகலை
அறம் செய விரும்பு! வாகை சூடி வரவேற்று, வந்த விருந்தினர் மகிழ வகை செய்து பணிவுடன் அன்பும் காட்டுந் திறம் பருமிய நாட்டுப் பண்பாட்(டு) அறம்! ஒப்பிலா ஒண்தமிழ் ஓதுதல் அறம் ஒரு நிலையில்லா மனத்தை ஆளுதல் அறம் கொல்லா நெறியும் வாய்மையும் அறம் கோபம் வென்ற சாந்தம் அறம்! தன்னல மில்லாத் தியாகம் அறம் தாய், தந்தையரைப் பேணுதல் அறம் பிறன் மனை நோக்காப் பேராண்மை அறம். பேதம் இல்லா சமுதாயமே அறம்! அறத்தின் பயனே அட்சயப் பாத்திரம் அறத்தின் சிறப்பே அன்ன…
ஊக்கமது கைவிடேல்! – பா.உலோகநாதன்
ஊக்கமது கைவிடேல்! எல்லைகள் வேண்டா! உன்மன வெளியில் நிற்பாய் நடப்பாய் சிறகுகள் விரிப்பாய்! ஊக்கமது கைவிடேல் இளைஞனே! எதுவரை முடியும் அதுவரை ஓடு அதையும் கடந்து சில அடி தாண்டு! ஊக்கமது கைவிடேல் இளைஞனே! இலக்குகள் நிருணயி பாதைகள் வடிவமை தடைகளைத் தகர்த்தெறி பயணங்கள் தொடங்கு! ஊக்கமது கைவிடேல் இளைஞனே! காரிருள் என்பது கருக்கல் வரைக்கும் விடியலில் ஒளியின் கதவுகள் திறக்கும் ஊக்கமது கைவிடேல் இளைஞனே! காலங்கள் மாறும் வருடங்கள் ஓடும் – உன் கனவுகள் ஒருநாள் நிச்சயம் நிறைவேறும்! ஊக்கமது கைவிடேல் இளைஞனே!…