மங்காத் தமிழ் வளர்க்கும் மறைமலை இலக்குவனார்!
மங்காத் தமிழ் வளர்க்கும் மறைமலை இலக்குவனார்! திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும் என்னும் பாரதியார் நல்லுரைக்கிணங்க அயல்நாட்டாராலும் போற்றத்தகும் புலமையும் பிறர் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகம் வணங்கச் செய்யும் தமிழ் வளமையும் மிக்க அருந்தமிழ்ச் சான்றோர் பேராசிரியர் இலக்குவனார் மறைமலை அவர்கள். தமிழ்நாட்டில் சென்னை மாநிலக்கல்லூரியில் 30 ஆண்டுகளும் புறநகர்க்கல்லூரிகளில் 5 ஆண்டுகளும் கல்விப்பணி ஆற்றியதுடன் ஓராண்டுக்காலம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். அங்குப் பணியாற்றுகையில் அப்பல்கலைக்கழகம் சார்பில் பிற அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும்…