(தோழர் தியாகு எழுதுகிறார் 250 : இசுலாமியச் சிறைப்பட்டோர் விடுதலை – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மீண்டும் வெண்மணி! கீழ்வெண்மணி வன்கொடுமை (1968) நிகழ்ந்து 55ஆண்டு முடிந்து விட்டன. என்ன நடந்தது? எப்படி நடந்தது? அதற்கு யார் பொறுப்பு? எந்த அளவுக்குப் பொறுப்பு? கீழ்வெண்மணிக்கான எதிர்வினைகள் என்ன? கீழ்வெண்மணியின் வரலாற்றுப் படிப்பினைகள் என்ன? இந்த வினாக்களுக்கு விடையளிக்கப் பலரும் முயன்றுள்ளனர். நான் எழுதியும் பேசியும் உள்ளேன். தோழர் ஏ.சி..கே. (அ.கோ. கத்தூரிரெங்கன்) எழுதியுள்ளார், செவ்வி கொடுத்துள்ளார். தோழர் கோ. வீரையன் எழுதியுள்ளார். இன்னும் பலரும்…