அமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ? – இலக்குவனார் திருவள்ளுவன்
அமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ? சொலல் வல்லர் சோர்விலர் இன்று சொல்லவும் இயலவில்லை! சோர்வும் விடவில்லை! கலைஞர்களைத் தன் சொல்லோவியங்களால் உருவாக்கிய கலைஞர் கருணாநிதியின் சொல்ல முடியா அமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ? ஆட்சிச்சிறையில் இல்லாத பொழுது உரிமையுடன் முழங்க முடிந்தது! சிறைச்சாலையைப் பூஞ்சோலையாய்க் கருத முடிந்தது! தமி்ழ் தமிழ் என்று தாளமிட முடிந்தது! ஆட்சியில் குமுக நலன்களுக்குத் தீர்வு கண்டு பெண்ணுரிமை பேண முடிந்தது! சமத்துவம் காண முடிந்தது! ஆரியத்துடன் இணையவும் முடிந்தது! அன்னைத்தமிழை மறக்கவும் முடிந்தது! கல்விநிலையங்களில் விரட்டப்படும் தமிழால்…