மஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி
மஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி மீன்கள் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றம் தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் மீன் விற்பனையில் முறைகேடு நடைபெறுகிறது எனப்பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மணிமுத்தாறு, ஆழியாறு முதலான இடங்களில் இருந்து மீன் குஞ்சுகள் பொதுப்பணித்துறை மூலம் வளர்க்கப்பட்டு அதன்பின்னர் மீன்வளத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கட்லா, ரோகு, மிருகாளி, திலேபியா போன்ற மீன்வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. மீன்களைப் பிடிப்பதற்கு 22 பரிசல்கள் மஞ்சளாறு அணையில் விடப்பட்டுள்ளன. இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களில் பங்குத்தொகையாக மீன்பிடிப்பவர்களுக்கு ஒரு பங்கும், மீன்வளத்துறைக்கு…