திருக்குறள் வாழ்க்கை நூல் – அறிஞர் முகம்மது சுல்தான் கலை.மு.,சட்.இ.,
வாழ்வின் பயனை மக்கள் அடைவதற்கு வழிகாட்டிகளாக உலகின் பல்வேறு மொழிகளில் பல நூல்கள் உள. அவைகளுள் மூன்று நூல்கள், அவைகளை இயற்றியவர்களின் அறிவுத்திறத்தையும் ஆராய்ச்சி நுணுக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. தாங்கள் எழுதியிருப்பவைகள் எல்லாம் வல்ல கடவுளின் நாதம் அல்லது தொனி அல்லது வெளிப்பாடு என்று இந்த மூன்று நூல்களின் ஆசிரியர்கள் சொல்லவில்லை. தங்களுக்குத் தெய்வ தூதர்களால் அருளப்பட்ட திருவாக்கு என்றும், அவ்வாசிரியர்கள் விளம்பரம் செய்யவில்லை. அம்மூன்று நூல்களும் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் உலக மக்களுக்கு அளிக்கப்பட்டவை. அவை; 1….