பள்ளுபாடலுக்குத் துள்ளியாடுவோம்! – சொ.வினைதீர்த்தான்
சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க சிறப்பு கொண்டது பள்ளு இலக்கியம். 18 ஆம் நூற்றாண்டு மக்கள் வாழ்க்கையைக் கம்பனின் கவிநயம்போல் இனிய கூறும் இலக்கியம் முக்கூடற்பள்ளு. இதன் சிறப்பு குறித்துத் திரு சொ.வினைதீர்த்தான் “பள்ளு இலக்கியம்-முக்கூடற்பள்ளு” என்னும் தலைப்பில், ஆனி 28, 2045 / 12.07.2014 சனிக்கிழமையன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க இலக்கியக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். காரைக்குடியில் ஒவ்வொரு திங்களும் இரண்டாவது சனிக்கிழமையன்று மாலை, சங்கத்தின் சார்ப்பாக இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 2004 தொடங்கி நடக்கிற நிகழ்வில் எழுபத்து நான்காவது…