மாநில உரிமைகள் கூட்டமைப்பை முதல்வர் உருவாக்க வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மாநில உரிமைகள் கூட்டமைப்பை முதல்வர் உருவாக்க வேண்டும்! மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதில் முன்னணியிலும் வழிகாட்டியாகவும் இருப்பது தமிழ்நாடே! “மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி” எனப் பேரறிஞர் அண்ணா முதலில் குரல் கொடுத்திருந்தாலும் மாநில உரிமைகள் தொடர்பான முழக்கங்களுக்கும் எழுத்துரைகளுக்கும் வடிவம் கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியே! அவரது வழியில் அவரது திருமகனார் மு.க.தாலின் இந்தியாவிற்கு வழிகாட்டியாக மாநில உரிமைகளுக்காகச் செயல்வடிவம் தருவதில் முனைந்துள்ளார். அன்றைய முதல்வர் கலைஞர், 19.08.1969 அன்று அறிவித்ததற்கிணங்க 22.09.1969 இல் பி. வி. இராசமன்னார் எனச் சுருக்கமாக அறியப்படும்…