தமிழ் ஒன்றே உலக முதன் மொழியாம் பெருமைக்கும் தகுதிக்கும் உரியது ! – சி.இலக்குவனார்

  உலக மொழிகளை எல்லாம் கற்று ஆராய வல்ல வாய்ப்பு ஏற்படுமேல் தமிழ் ஒன்றே உலக முதன் மொழியாம் பெருமைக்கும் தகுதிக்கும் உரியது என்று நிலைநாட்ட இயலும். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது வெற்றுரையன்று. ஓரிடத்தில் தோன்றிய மாந்தர் பல்வேறு இடங்கட்கும் பிரிந்து சென்று பல வகையாலும் வேறுபட்டு விளங்குகின்றனர்.  மாந்தர் முதலில் தோன்றிய இடம் தென்னகமே என்று மாந்தர் நூல், வரலாற்று நூல், நில நூல் ஆராய்ச்சியாளர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். இக் கூற்று வலுப்பெற்று நிலை நாட்டப்படுமேல், தமிழே உலக மொழிகளின்…

கொச்சைத்தமிழின் வெவ்வேறு வடிவங்களே பிற மொழிகள்

கொச்சைத்தமிழின் வெவ்வேறு வடிவங்களே பிற மொழிகள்   கொச்சைத் தமிழாகப் பிறந்த மொழிகளில் மிகப் பழமையானவை சுமேரிய, எகிப்து, மொழிகளாகும். பின்னர் வடமொழி, கிரேக்கம், இலத்தீன் என்று சிறப்பான வளம் பெற்ற மொழிகள் தோன்றின. கிரேக்கம், இலத்தீன், வடமொழியாவும் கொச்சைத் தமிழ் என்பதால் அவை மக்கள் வழக்கில் நிற்காமல் மறைந்தன. கொச்சைத் தமிழிலும் மீண்டும் எழுத்து மொழி, பேச்சு மொழி எனப் பல்வேறு மொழிகள் இணைந்தன. அவையே இன்றைய ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், மற்றும் அரபி, உருது, இந்திய மொழிகளாகும். தூய தமிழ் தனித்து…