புரட்சியில் பூத்த மலர்  – க.இந்திரசித்து   பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ் மொழியின் எழுச்சிக்கும், ஏற்றத்திற்கும் போராடிய போர்ப்படை மறவர்களின் வரிசையில் முன்னணியில் நின்றவர். கார்ல்மார்க்சு, இலெனின், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதெல்லாம் ஏற்படும் உணர்ச்சியும், உந்துதலும், வேகமும், வீரமும், கிளர்ச்சியும், கிளர்ந்து எழுவதைப் போன்றே இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதும் தோன்றுகின்றன. என்னடா! இப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்து மறைந்திருக்கிறாரே – அவரை நாம் மறந்திருக்கிறோமே’ என்னும் வியப்பும், வேதனையும் ஒருங்கே எழுகின்றன. காவிய தலைவனாகவே காட்சியளிக்கும்…