அறிஞர்கள், அமைப்பினருக்கான தமிழக அரசின் விருதுகள் – முதல்வர் வழங்கினார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி செ.செயலலிதா அவர்கள் புரட்டாசி 25, 2046 / 12.10.2015 அன்று தலைமைச் செயலகத்தில், 2014, 2015-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, அறிஞர் போப்(பு) விருது, உமறுப்புலவர் விருது ஆகிய விருதுகளையும், 2013, 2014-ஆம் ஆண்டுகளுக்கான முதலமைச்சர் கணிணித் தமிழ் விருதுகளையும், 2015-ஆம் ஆண்டிற்கான இளங்கோவடிகள் விருதினையும், விருதாளர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்கள். தமிழுக்குத் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள்…
தமிழக மக்களுக்கு நல்லது செய்வது தான் முதல்பணி – விசயகாந்து
தமிழக மக்களுக்கு நல்லது செய்வது தான் முதல்பணி, விசயகாந்த்து முதலமைச்சராவது இரண்டாம்நிலைதான், என தே.மு.தி.க., தலைவர் விசயகாந்து தூத்துக்குடியில் பேசினார். வேலை வாய்ப்பு இல்லை: செல்வநாயகபுரம் சாலையில் ம.தி.மு.க., வேட்பாளர் சோயலை ஆதரித்து விசயகாந்த்து பேசியதாவது: தூத்துக்குடி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு மீனவர்கள், கோவில்பட்டியில் தீப்பெட்டித்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். ஆனால் இங்கு வேலை வாயப்பு இல்லாமல் தொழிலாளர்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் இல்லை: அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் இங்குள்ளது. தமிழகத்தின்…