நிதி ஆளுமையை இழக்கும் தமிழகம்
ஒரு புறம் தமிழ்நாட்டில் தொழிலகங்களில் அயலவர் ஆதிக்கம் ஓங்கிக் கொண்டு உள்ளது. மறு புறமோ தமிழ்நாட்டவர்கள் முதலீடுகள் அயலகங்களுக்குத் திருப்பிவிடப்படும் அவலம் அரங்கேறுகிறது. தமிழகக் கருநாடக எல்லையில் உள்ள சாம்ராசு நகர் மாவட்டத்தில், 1,400 காணியில் தொழில் மண்டலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முதலீட்டாளர்களை இழுக்கும் வகையில், கோவையில், கடந்த, 20.01.14 அன்று ‘சாம்ராசு நகர் முதலீட்டாளர்கள் மாநாடு’ நடத்தப்பட்டது. கருநாடகத் தொழில் வணிக அவைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாடு, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழில் முனைவோரின்…