தோழர் தியாகு எழுதுகிறார் 193 : நலங்கிள்ளி , பொன்.சந்திரன் கருத்தூட்டங்கள்
(தோழர் தியாகு எழுதுகிறார் 191 : கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாக மாற விடோம்!- தொடர்ச்சி) அன்பர் நலங்கிள்ளி எழுதுகிறார். தாழி 221 கண்டேன். இந்து அறநிலைத் துறையா? இந்துத்துவ சேவைத் துறையா? என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கட்டுரை கண்டேன். அனைவருக்கும் தெளிவை ஏற்படுத்தும் கட்டுரை. இது குறித்து என் கருத்தையும் பதிவிட விரும்புகிறேன். மதச் சார்பின்மை என்பது எல்லா மதத்தையும் சமமாக நடத்துவதில்லை, எல்லா மதத்திலிருந்தும் விலகியிருத்தல். அமைச்சர்கள் மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது, மத விழாக்களில் கலந்து கொள்வது போன்ற செயல்களைத்…