தமிழ் மாநாடும் தமிழக அரசும் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் மாநாடும் தமிழக அரசும் உலகத்தமிழாராய்ச்சி மன்றம் ஆசியவியல் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய 11ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு இனிதே நிகழ்ந்து முடிந்தது. போதிய காலமின்மை, போதிய பணமின்மை ஆகியவற்றால் இடர்ப்பாடுகளை எதிர்நோக்கினாலும் மாநாடு சிறப்புடன் முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைவு விழாவின்போது சட்டக்கதிர் சம்பத்து அவர்கள் “அரங்கு நிறைய ஆராய்ச்சியாளர்கள் அமைதியாக அமர்ந்திருப்பதே மாநாட்டின் வெற்றிக்கு அடையாளம்” என்றார். அஃது உண்மைதான். பொதுவாகக் கருத்தரங்கம் அல்லது மாநாட்டிற்கு வருபவர்கள் அமர்வின்பொழுது முழுமையாக இருப்பதில்லை. அல்லது எல்லா நாள் அமர்வுகளிலும் பங்கேற்பதில்லை. ஆனால், இந்த…