சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம்
(நவம்பர் 23, 2014 இன் தொடர்ச்சி) மையக்கருத்துரை 4. தொல்காப்பியர் நோக்கு தொல்காப்பியரே சுற்றுச்சூழல் திறனாய்வுக்கு முன்னோடி எனலாம். அது இரண்டு நிலையில் அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது.1. பலரும் எடுத்துக் காட்டும் முதல்,கரு, உரி என்ற பாகுபாடு, 2. அவருடைய உள்ளுறை, இறைச்சி என்ற கருத்தமைவுகள் மூலம் புலனாகும் சுற்றுச் சூழல் திறனாய்வு கருத்துகள். 4.1.முதல், கரு, உரி ‘முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலுங் காலை முறை சிறந்த னவே பாடலுள் பயின்றவை நாடுங்…