(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என்சுயசரிதை’ 13 : வழக்குரைஞராகவேலைபார்த்தது 2/2 – தொடர்ச்சி) ‘என் சுயசரிதை’ 7. முதிர் பருவம் நான் எனது 51-ஆவது வயதில் சிறுவழக்கு நீதிமன்ற நீதிபியாக நியமிக்கப்பட்டேன். எனக்கு 55 வயதானவுடன் அவ் வயதிற்குமேல் அரசாங்க உத்தியோகத்திலிருந்து விலக வேண்டும் என்னும் நியமனப்படி அவ் வேலையிலிருந்து! விலகினேன். இதனிடையே சில மாதங்கள் முதன்மை மாநில நடுவராக(C.P.M.) வேலை பார்த்தேன். மேற்கண்டபடி நீதிபதியாக இருந்தகாலத்தின் சில வியவகாரங்களை இங்கு எழுதுகிறேன். நான் நீதிபதியாக முதல் நாள் உட்கார்ந்தபோது வழக்குரைஞர்களின் தரப்பாக காலஞ்சென்ற சீமான்…